" மங்கையராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் அம்மா "
என்ற கவிஞனின் எண்ணதிற்கு உருவம் கொடுத்து வருகின்றனர் இன்றைய
பெண்கள். உலகின் மிகப்பெரிய பதவிகளையும் பொறுப்புகளையும் இன்னும்
பல்வேறு சாதனைகளும் வகித்து வருகின்றனர். மிகவும் பெருமையாகவே உள்ளது.
ஆணுக்கு பெண் என்றும் குறைந்தவள் அல்ல என்று எல்லாத் துறைகளிலும் மகளிரின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.
இந்நன்னாளில் குடும்ப முதல் கிராமம், நகரம்,நாடு , ஏன் உலகமே பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்போம். பெண்ணின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.
இறுதியாக, ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமுதாயம். அதில் இருபாலாருடைய காத்திரமான பங்களிப்பும் இன்றியமையாதது. பெண் என்பதாலேயே அவள் இரண்டாம் பாலினமாக நோக்கப்படும் கருத்துநிலை படிப்படியாக மாற்றப்படும்போது, பெண்களின் நிலைமை மேம்பாடு அடையும் என்பதில் ஐயமில்லை.பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற, பெண்களும் சிறப்பானதொரு மனித உயிரியாக மதிக்கப்படும் புதியதோர் உலகை உருவாக்குவதில் நாமும் நம்முடைய கரங்களை இணைத்துக் கொள்வோம்! ஒற்றுமையின் பலத்தினால் வெல்வோம்!
பெண்ணாக பிறந்தற்கு நான் என்றும் பெருமை அடைகிறேன்.
நீங்க உங்க vote eh எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் .........