வணக்கம் நண்பர்களே! இனிய வருடத்தை ஆவலோடு வரவேற்க காத்திருகின்றோம்.
"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!". இது சினிமாப் பாட்டு மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவமும் கூட.
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் நம்மை விட்டு ஒரு ஆயுள் ஆண்டு விடை பெறுகிறது. இது பலருக்கும் கவலையைக் கொடுத்தாலும், கடந்து போனதை நினைக்காமல் நாம் இனி கடக்கப் போவதை நினைத்து தொடர்ந்து நடை போடுவதே பாசிட்டிவ் மனப்பாங்கு. இந்த ஒரு ஆண்டில் நாம் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருப்போம். சில சாதனைகளையும் செய்திருப்போம்.
அந்த வகையி்ல் 2010ம் ஆண்டு விடை பெற்று விட்டது. அதில் பலவற்றை செய்ய மறந்திருப்போம், சிலவற்றை செய்ய முயன்றிருப்போம்.
மொத்தத்தில் பாதிக் கிணறுதான் தாண்டியிருப்போம்.
எந்த விஷயத்தைச் செய்தாலும் அதைத் திட்டமிட்டு செய்ய உறுதி எடுப்போம். ஒரு காரியத்தில் இறங்கும்போது அதை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்ற திட்டமிடலோடு ஈடுபட்டால் நிச்சயம் வாகை சூடலாம்.
2010ல் செய்ய நினைத்ததை, செய்ய முடியாமல் போனதை இந்த ஆண்டில் சாதிக்க முற்படுவோம்.
எது வந்தால் வரட்டும், வருவதை எதிர்கொள்வோம் என்ற துணிச்சலோடு போராடுவோம்.
அது மட்டுமின்றி நாம் அனைவரும் கண்டிப்பாக மரம் அல்லது செடியாவது வளர்ப்போம் என்ற உறுதி கொள்வோம் .
சந்தோஷமான, இனிமையான ஆண்டாக, பூரண திருப்தியுடன் கூடிய சிறப்பான ஆண்டாக இது மலரட்டும், குதூகலம் கூடட்டும். உடலிலிருந்து கரைந்து கொண்டிருக்கும் இளமையை கருத்தில் கொள்ளாமல், உள்ளத்து இளமையைக் கூட்டி, வாழ்வில் இனிமை சேர்க்க 2011 அனைவருக்கும் உதவட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு
செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்
என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.