»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Thursday, February 24, 2011

சுலபமாக லோகோக்களை உருவாக்கலாம் வாங்க !

                      
             லோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். 
                         இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

                        இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.

Friday, February 18, 2011

::விசித்திரமான மிகச்சிறிய கையடக்க பிரிண்டர்::

                 தற்கால தொழில்நுட்பத்தை பொறுத்த வரையில் புதிய உபகரணங்கள் வெகுவாகவே அறிமுகப்படுத்தப்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே.
                நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் Printer technology யின் ஓர் புதிய பரிமானமாக இதை குறிப்பிடலாம். நாம் Printer ஒன்றை தெரிவு செய்யும் போது குறிப்பாக கவனிப்பது சிறந்த தரம்(Quality), வேகம்(Speed), பருமன்(Size) மற்றும் Background noise level ஆகியவையே.
                     அவ்வகையில் Printbrush என அழைக்கப்படும் இந்த பிரிண்டரானது ஓரு வித்தியாசமான, விசித்திரமான பிரிண்டர் ஆகும். 

Monday, February 14, 2011

மைக்ரோசாப்ட் எச்சரிக்கையிட்டுள்ளது! 

இன்டர்நெட்     எக்ஸ்ப்ளோரர் எனும் 
உலாவியை    பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு      ஆபத்து ஏற்பட்டுள்ளதாக   மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
             
            புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

                 
           இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

                   வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  ----------------------------------**************************************------------------------------------------

நீங்க உங்க vote eh  எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் .........

      

Friday, February 4, 2011

புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல்  பெண்ணே  அல்ல ஒரு ஆண்  கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்

       வணக்கம்!  ஓவியம் காண்பதில் எல்லோருக்கும் அலாதி ரசனை ண்டு. எனக்கும்  உண்டு, அப்படி எண்ணுகையில் இந்த தகவல் அறிந்தேன். பகிர்தேன் உங்களுடன்.

  புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவியத்தை புகழ் பெற்ற ஓவியர் லியோ நார்டோ டாவின்சி வரைந்தார். கடந்த 1490-ம் அண்டு இந்த ஓவியத்தை அவர் வரைந்தார். பிரான்சை சேர்ந்த பட்டு வியாபாரி லிசா செரா டினி என்பவரின் மனைவி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார் என்று கூறப்பட்டது    
      ஆனால்,
  உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.

  கவிஞர்கள் அழகிய பெண்களை வாழும் மோனாலிசா என்று வர்ணிப்பதுண்டு. ஆனால், இனி அவ்வாறு கூற முடியாது. காரணம் லியோ நார்டோ டாவின்சி தனது உதவியாளராக இருந்த காப்ரோட்டி என்பவரை மாடலாக வைத்து தான் மோனாலிசாவை வரைந்துள்ளார்.

Tuesday, February 1, 2011

இணையத்திலே புகைப்படங்களை எளிதாக மாற்றலாம்

                          இணையத்தில் பரவிக்கிடக்கின்றது பல தரப்பட்ட மென்பொருள்கள்.  எல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் Photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே உங்களால் உபயோகப்படுத்த முடியும்.  இனி, இதற்காக வருந்த    அவசியம் இல்லை .
                     புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம். அனைவருக்கும் பிரயோகமாக இருக்கும.மென்பொருளே இல்லாமல் இப்பொழுது உங்களால் புகைப்படத்தை உருவாக்கவோ மாற்றி அமைக்கவோ முடியும். இதற்கு தேவையானது உங்கள் கணினி மற்றும் இணைய வசதி.
Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !