»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Wednesday, April 13, 2011

சித்திரை நல்வாழ்த்துக்கள்!

 இதோ வந்துட்டேன். வேலை பழு காரணமாக தொடர்ந்து என்னால் பதிவை போட இயலவில்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது  உடனே  உங்களுடன்.

            அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரை நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டும் சந்தோசமாக கொண்டாட இருக்கின்றனர். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் பிரார்த்தனை.
         இந்தியாவில் க்ரக்கேரியன் (Gregorian) காலண்டருடன், இந்து பஞ்சாங்கமும் அனேக விசேஷங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இப்பஞ்சாங்கப்படி, ஏப்ரல் மாதத்தின் நடுவில் 13, 14 ந்தேதியில் வருவதே சித்திரை வருடப் பிறப்பு. சித்திரை மாதம்  தொடங்கியே 12 மாதங்களை வரிசையாகக் கணக்கிடுகின்றனர் தமிழர்கள். 
இந்துக்கள் குறிப்பாக தமிழர்கள் அன்றைய தினம் வீட்டை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வண்ணக்கோலமிட்டு,வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டிக் கொண்டாடுவர். புத்தாடைகள் உடுத்தி, பெரியோர்களிடம் ஆசி பெற்று மகிழ்வர். மேலும், மாங்காய்ப் பச்சடி செய்து வடை,பருப்பு பாயஸத்துடன் உண்டு மகிழ்வர். வாழ்வில் இனிப்பும், கசப்பும் மாறி மாறி வரும், அதனைத் துணிவோடு எதிர்கொண்டு ஜெயிக்கவேண்டும் என்பதனை உணர்த்தவே இந்த ‘மாங்காய்ப் பச்சடி” வழக்கம் என்பர் பெரியோர்.(வெல்லம், மாங்காய், வேப்பம்பூ சேர்த்துச் செய்யும் ஒருவகை இனிப்பு.

இவ்வினிய புத்தாண்டில் கனவுகள் நினைவாகி வாழ்வு மேம்பட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !