»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Thursday, March 3, 2011

::மௌனத்திற்கு மொழியேது ::

      இன்று நான் மெளனமாக இருந்தேன் என்னுள் பல எண்ணங்களை மௌன நிலை சமர்ப்பித்தது . என் மௌனத்தின் மூலம் இந்த பதிவை பகிர்கிறேன்...... ஆனால் மௌனத்திற்கு ஏது மொழி.
                       இருக்கு என்று சொன்னால் நம்புவீர்களா !
(மௌனமென்றால் என்ன? வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம் என்று சொல்லலாம். உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம்.)
         விடியலுக்கு முன்னே விழி திறந்து..... என்னோடு கைகோர்த்து நடை பழகும் சில நினைவுகளும் என் கட்டில் வரை வந்து கண் இமைகள் மூடும் முன்னே இமை திறக்கும் சில கனவுகளும் என் வாழ்வின் அன்றாட அம்சங்களாகி விடும்போது என் மௌனம் மௌனமாகிறது.
        மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.
        இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.
         ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.
                         எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?
       நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
     போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.
     அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.
 என்ன நீங்களும் இதை ட்ரை பண்ணலாமே ! மௌனம் ஒரு வித காதல்...ஆம் ....

2 comments:

  1. தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறீப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

    பாரி தாண்டவமூர்த்தி
    http://blogintamil.blogspot.com/2011/03/5.html

    ReplyDelete
  2. மிகவும் சந்தோஷம் என்னை உங்கள் வலைச்சரத்தில் கூறியதற்கு.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !