»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Thursday, February 24, 2011

சுலபமாக லோகோக்களை உருவாக்கலாம் வாங்க !

                      
             லோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். 
                         இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

                        இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.

                         இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய உங்களிடம், முகநூல் (Face Book) கணக்கு இருக்க வேண்டும். சுட்டியினை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மென்பொருளை தரவிறக்கம் செய்ய Like என்னும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

                          இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை ஒப்பன் செய்யவும், அதில் ஏற்கனவே லோகோ டெம்பிளேட்கள் இருக்கும், அதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையெனில் புதியதாக நீங்களே ஒரு லோகோவினை உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளில் எடிட்ங் வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கிய லோகோக்களை பல்வேறு விதமான பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.
இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளின் உதவியுடன் மிகவும் எளிமையான முறையில் லோகோக்களை உருவாக்கி கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் மிக எளிய முறையில் லோகோக்களை உருவாக்கலாம் .

          உங்கள் கருத்துக்களை சொல்லவும் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !