»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, February 14, 2011

மைக்ரோசாப்ட் எச்சரிக்கையிட்டுள்ளது! 

இன்டர்நெட்     எக்ஸ்ப்ளோரர் எனும் 
உலாவியை    பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு      ஆபத்து ஏற்பட்டுள்ளதாக   மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
             
            புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

                 
           இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

                   வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  ----------------------------------**************************************------------------------------------------

நீங்க உங்க vote eh  எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் .........

      

Sunday, January 23, 2011

ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம்

            ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை  இயக்க முடியுமா. ஏன் முடியாது இருக்கவே இருக்கு ஒரு அற்புதமான software  அது தான் Team Viewer.

            Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும். 

           இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
 

1.உபயோகப்படுத்த கட்டணம் இல்லை

(Free version)

 

2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb)

 

3.இணைய வசதி தேவை “

மேலும் தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும்






Tuesday, January 18, 2011

உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம் 'வாட்சன்(WATSON)'!

நாம் பல தரப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏந்திரங்களை (ரோபோ) திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். சில ரோபோ செயல்பாடுகளை ஜப்பான் , சீன நாட்டு வல்லுநர்கள் செய்து காட்டுவதை செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவு ரோபோ IBM நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த 5 வருடங்களாக உழைத்து உருவாக்கப்பட்ட இந்த ரொபோவிற்கு வாட்சன் என்று பெயரிட்டுள்ளார்கள். வாட்சன் என்பவர் 1924′இல் IBM நிறுவனத்திற்கு உயிர் கொடுத்தவர். அவரின் நினைவாக இந்த அமைப்பு (System) அமைக்கப்பட்டுள்ளது.

சரி, வாட்சன் என்றல் என்ன என்பதை காண்போம் ?
                    எளிதில் புரியுமாறு சொல்ல வேண்டும் என்றால்.  ஒரு கணினி அதனிடம் நீங்கள் கேட்கும் எந்த ஒரு அறிவியல், கலை, வரலாறு, கணிதம், விண்வெளி, கதை, கவிதை, இலக்கியம் என எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் விரைவாக மற்றும் துளியமாக பதில் சொல்லும்.

                     உங்கள் கேள்விகளை TYPE செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களின் VOICE எந்த மாதிரியான உச்சரிப்பாக இருந்தாலும் அதை கவனித்து தன்னிடம் உள்ள தகவல்களில் இருந்து உங்களின் கேள்விக்கான பதிலை இது தரும்.
                      நான் மேற்சொன்ன தகவல் கேட்க எளிதாக இருக்கும்., இதோ இந்த கேள்வியைப் பாருங்கள்.,
Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !