::தாஜ் மகால்::
(Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.
ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அது வெறும் Introduction தான் ,
அது வெறும் Introduction தான் ,
ஒரு சந்தோஷமான தகவல் என்னவென்றால் ,
"உலகின் அதிசயகளில் தாஜ்மஹாலுக்கே முதலிடம் கிடைத்துள்ளது "
உலகில் புதிய ஏழு உலக அதிசயங்களை தேர்வு செய்ய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்னாட் வெப்பர் என்பவர் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
யுனஸ்கோ (UNESCO) அமைப்பும் வாக்கெடுப்பு மூலம் உலக அதிசயங்களை தேர்வு செய்ய கூடாது என கண்டனம் தெரிவித்தது. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. இணைய தளம் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்து 21 கட்டிடங்கள் மட்டும் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.
உலகின் அதிசயகளில் தாஜ்மஹாலுக்கே முதலிடம்!
நன்றி மீண்டும் வருக !