»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Friday, January 21, 2011

உலகின் அதிசயகளில் தாஜ்மஹாலுக்கே முதலிடம்!


::தாஜ் மகால்:: 
                      (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.

                  ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 அது வெறும்  Introduction தான் ,

ஒரு சந்தோஷமான  தகவல் என்னவென்றால் ,

         "உலகின் அதிசயகளில் தாஜ்மஹாலுக்கே முதலிடம் கிடைத்துள்ளது "

                               உலகில் புதிய ஏழு  உலக அதிசயங்களை தேர்வு செய்ய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்னாட் வெப்பர் என்பவர் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

                             யுனஸ்கோ (UNESCO) அமைப்பும் வாக்கெடுப்பு மூலம் உலக அதிசயங்களை தேர்வு செய்ய கூடாது என கண்டனம் தெரிவித்தது. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. இணைய தளம் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்து 21 கட்டிடங்கள் மட்டும் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.  


                              இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதிப்மினார் உள்ளிட்ட கட்டிடங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் எகிப்து பிரமிடை நிரந்தர அதிசயமாக கூறி இருந்தனர். மீதி 7 கட்டிடங்களை தேர்வு செய்ய தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது.

                         உலகம் முழுவதும் இருந்து 10 கோடி பேர் ஓட்டு போட்டனர். இறுதியில் 7 அதிசயங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த பட்டியலை நேற்று போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில் முறைப்படி அறிவித்தனர்.
 
 இதில் தாஜ்மகால் முதலிடத்தை பெற்று உள்ளது.
7 அதிசயங்களின் பெயர் மற்றும் அமைந்துள்ள நாடுகள் விவரம்:-
 1. தாஜ்மகால் இந்தியா
2. சீனபெருஞ்சுவர்- சீனா
3. பெட்ரா-ஜோர்டான்
4. பிரமாண்ட ஏசுநாதர் சிலை பிரேசில்
5. மச்சுபிச்சு- பெரு
6. மயன்-மெக்சிகோ
7. கொலோசியம்- இத்தாலி


 7 அதிசயங்கள் அறிவிக்கப்பட்டாலும் இதை ஐ.நா. அமைப்போ அல்லது முக்கிய அமைப்புகளோ ஏற்கவில்லை.

எதுவா இருந்தாலும் எனக்கு தாஜ் மஹால் ரொம்ப பிடிக்கும் பா......
ஒழுங்கா தண்ணி அடி இல்ல இப்படிதான் செய்வேன் ஹி ஹிஹி 



 
நீங்க உங்க vote eh  எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் ..........

4 comments:

  1. தாஜ் மஹால் முதலிடம் பிடித்ததில் நமக்கு ஒரு பெருமை தான் .

    ReplyDelete
  2. நன்றி Vijay அவர்களே . மீண்டும் என்னை தொடர்க

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !