»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Thursday, January 13, 2011

தை திருநாளாம் பொங்கல் தமிழர் பண்பாடு!

உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல்.




தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, கடந்த ஆண்டில் இருந்து தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தைப் பொங்கல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.


`பொங்கல் பண்டிகை’ என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

பொங்கல் என்பதற்கு `பொங்கி வழிதல்’, `பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

 எங்க வீட்ல கூட பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கட்டியை வைத்து அவற்றில் புதிய பானைகளில் வெண்பொங்கலும், சர்க்கரை பொங்கலும் தனித்தனியே செய்து, சூரியனுக்குப் படைத்து வழிபடுறோம். பாருங்க போன வருஷம் கொண்டாடின சமயத்தில எடத்த போட்டோ ! சிட்டி ல  இந்தமாரி தான் கொண்டாடமுடியும் போல  .


சரி ! இப்ப மேட்டருக்கு வருவோம் ,


பொங்கல் பண்டிகை சமத்துவத்தை வளர்க்கும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா, என்ன...?

வெளிமாநிலங்களில் பொங்கல்!
உறவுகளை வளர்க்கும் இந்த பொங்கல், வட மாநிலங்களில் 'சங்கராந்தி' என்ற பெயரில் கோலமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் அறுவடைத் திருவிழாவாகவும், உழைப்பின் பெருமையை போற்றும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
நம்மூரில் ஜல்லிக்கட்டு, கோழிச்சண்டைகள், ரேக்ளா ரேஸ் போன்று, வட மாநிலங்களில் பட்டம் பறக்கவிடுவது மிகப்பெரிய போட்டியாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலும் இங்குள்ள மக்கள் கடற்கரை, பொது மைதானங்கள் போன்ற இடங்களில் கூடி போட்டி போட்டுகொண்டு பட்டம் பறக்கவிடுகின்றனர்.

அன்றைய தினத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கூட பட்டங்கள் பறந்துகொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜனவரி 14ம் தேதி 'சர்வதேச பட்டம்விடும் திருவிழா'வாகவே கொண்டாடப்படுவது சிறப்பான அம்சம்.


இந்த விழாக்களின் மூலம், பட்டம் பறக்கிறதோ இல்லையோ, அங்கு சமத்துவமும், சகோதரத்துவமும் இறக்கை கட்டி பறக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், உ த்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் சமத்துவம் பொங்குகிறது.  

வெளிநாடுகளில் பொங்கல்!

உழைப்பை போற்றும் பண்டிகை என்பதால் வெளிநாடுகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், பண்டிகையின் பெயரும், கொண்டாடப்படும் தேதியும் தான் மாறுபடுமே தவிர, பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் சமத்துவம் வளர வேண்டும் தான்.

அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சீனா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டை நாடான இலங்கை போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் பொங்கல் தனி சிறப்பு பெற்றவை.

முடிவாக...

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சமத்துவத்தை மலரச் செய்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே, இந்த இனிய தித்திப்பான  பொங்கல் திருநாளில் பொங்கல் பொங்கட்டும். ஜாதி, மத பேதம் நீங்கி சமத்துவம் வளரட்டும். அனைவருக்கும்      என் 
 
            இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 
என்ன பொங்கல் கொண்டாட தயாரா ...


உங்கள் vote மற்றும் கருத்துக்கள் தேவை !








1 comment:

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !