இணையம் என்பது ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்தின் தகவல் பரிமாற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த பட்டது இருவது ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களின் பாவனைக்கென 1990 இல் Tim Berners-Lee என்பவரால் உருவான முதல் இணைய உலவி WorldWideWeb ஆகும்.
அதன் பின்னர் உலாவிகளின் வளர்ச்சி அதன் மூலம் இணைய உலகில் ஏற்பட்ட புரட்சி எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் தற்போது வெகுவாக பயன்படுத்தும் உலாவிகள் என்று பார்த்தால் நமக்கு தெரிந்தது Internet Explorer, Mozilla Firefox மற்றும் Google chrome ஆகும்.
இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர்களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த இருபது ஆண்டு காலத்தில் வந்த சில பிரபலமான பிரவுசர்கள் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
1.WorldWideWeb (1990):
உலகின் முதல் இன்டர்நெட் பிரவுசர். இன்றைய பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு கற்காலத்து மனிதன். கிராபிக்ஸ் எதுவும் இல்லாத குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டும் இயங்கிய பிரவுசர். ஆனால் இந்த பிரவுசரில் இருந்தபடியே இணைய தளப் பக்கங்களை எடிட் செய்திட முடிந்தது இதன் சிறப்பாக இருந்தது.
2.Viola WWW (1992):
2.Viola WWW (1992):
யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய வகையில் வெளியான முதல் பிரவுசர். முதன் முதலாக, பார்த்த இணைய தளங்களுக்கு முன்னும் பின்னும் செல்வதற்கும், ஹோம் பக்கத்தை அணுகுவதற்கும் வசதிகள் தரப்பட்டன. ஸ்டைல் ஷிட், ஸ்கிரிப்டிங் லாங்குவேஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் அளிக்கப்பட்டன.
3. Cello (1993):
விண்டோஸ் (பதிப்பு 3.0) இயக்கத்தில் செயல்படும் வகையில் உருவான முதல் பிரவுசர். இதனை உருவாக்கிய தாமஸ் புரூஸ், வழக்குரைஞர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதன் மூலம் பெறுவதற்காக வடிவமைத்துத் தந்தார். பெற்ற தகவல்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் பார்மட்டிலேயே இருந்தன.
4. Lynx 2.0 (1993):
இது உலகின் இரண்டாவது பிரவுசர். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றுமே பெற முடிந்தது. இதனால் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கிய கம்ப்யூட்டர்களில் இது இயங்கியது. 1993 வரை இது பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது. டெக்ஸ்ட் மட்டும் தேவைப்பட்டவர்களால் அதிகம் நாடப்பட்டது. இன்றும் சிலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
5. NCSA Mosaic 1.0 (1993):
மிக எளிமையான இயக்கத்திற்கு வழி வகுத்த முதல் பிரவுசர். இதனால் சாமானியர்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கியது. டெக்ஸ்ட் உள்ளாக படங்களையும் காட்டியது.
6. IBM WebExplorer (1994):
இருபது ஆண்டு காலத்தில் வந்த பிரபலமான பிரவுசர்கள்! 
நன்றி மீண்டும் வருக !