»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«
Showing posts with label மஞ்சள். Show all posts
Showing posts with label மஞ்சள். Show all posts

Tuesday, January 11, 2011

பொங்கல் ஸ்பெஷல்: மகத்துவம் நிறைந்த மஞ்சள் தான் !

             பொங்கல் ச்பெசியலில் முதல் நாம் மஞ்சள் மகத்துவத்தை அறிவோம் .


   மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். மஞ்சள் கிழங்கில் உள்ள மருத்துவப் பயன்களையும், அதன் மகத்துவத்தையும் பார்ப்போம். 

முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.

                இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் இதைச் சேர்த்து வருகிறார்கள்.

          மூன்றாவது ரகமான விரலி மஞ்சள்தான் சமையலறையின் முதற்பொருள்.       இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

               வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.     மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !