உலகின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேன் செல்கிறது . பூமண்டலத்தின் விண்வெளியில் தூசியின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகிய வற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.
இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகிய வற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.
மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கை யில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரி களிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.
பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

நன்றி மீண்டும் வருக !