»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Tuesday, January 25, 2011

::விண்வெளியில் தூசியின் அளவு இரட்டிப்பு::

          உலகின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேன் செல்கிறது . பூமண்டலத்தின்  விண்வெளியில் தூசியின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 


              இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகிய வற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார். 


                மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கை யில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

              பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரி களிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.

              பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

                ஆனால், இதே தூசு மண்டலம்தான் மேகத்தின் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு மழையை தடுத்து இதன்மூலம் கடும் வறட்சி ஏற்பட்டு இதனால் இந்த புதிய வறட்சியால் மேலும் தூசிகள் விண்வெளிக்குச் செல்லும் ஆபத்தும் உள்ளது.

                  மேலும் தூசுகளைப் பொறுத்தவரை கடல்நீர் ரசாயனத்திலும் தாக்கம் செலுத்துகிறது. தூசுதான் இரும்பின் மூலாதாரம். இதன் மூலம்தான் கடல் நீரின் மேற்பரப்பு, ஆழப்பகுதிகளில் வாழும் நுண்ணுயிரிகள் தங்களுக்குத் தேவையான கரியமிலவாயுவை உறிஞ்சுகிறது.

                    ஆய்வாளர்கள் பனிப்படலங்கள், ஏரியின் படிவுகள், மற்றும் பவளப்பாறை மாதிரிகளை எடுத்து பாலைவன தூசின் தன்மை களை ஆராய்கின்றனர்.கடல்நீரில் படிந்துள்ள தூசியினால் விண்வெளியில் உள்ள கரியமிலவாயு கடந்த 100 ஆண்டுகளில் 6% குறைந்துள்ளது.

இதுவரை வந்த ஆய்வுகள் மனித உற்பத்தி நடவடிக்கைகளினால் ஏற்படும் தூசி அதன் விளைவுகளை ஆராய்ந்துள்ள நிலையில் இந்த ஆய்வு இயற்கைத் தூசிகளின் நன்மை தீமைகளை மேலும் வெளிக்கொணரும் என்று கூறியுள்ளது.

எதுவா  இருந்தாலும் இதை தடுப்பதிற்கு  ஒரு வழி நம்மால் செய்ய முடியும் .
அதுதான்   மரம் வளர்ப்பது  என்ன சரிதானே ...........

                                  மரம் வளர்ப்போம் நன்மை பெயர்ப்போம்.   



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !